Pages

Wednesday, June 13, 2012

உருக்கொண்ட எண்ணங்கள்..

இணையத்தில் சுட்ட படம்..
தினம் வந்து கொண்டிருந்த
கனவுப்புலியொன்று
நனவில் வந்தது ஓர் நாளில்.

மூளைக்கனுப்பிய
நியூரான் சமிக்ஞைகள்
தொடர்பில் இல்லையென்று திரும்பி வந்து விட
திகைத்து மூச்சடைத்துத்
தடுமாறி நின்ற எனை நோக்கி
மெல்லக் கொட்டாவி விட்டபடி
திரும்பிப் படுத்துக் கொண்டது,
வாலசைவில்
தன் இருப்பைத் தெரிவித்தபடியே
தன் கட்டுக்குள் பிறரை வைக்க
நன்றாகக் கற்றிருந்த அந்தப்புலி.

எங்கணும் எதிலும் வாலின் நாட்டியத்தரிசனமளித்தும்
அற்ற பொழுதுகளில்
கூர் பல்லால் ஆசீர்வதித்தும்
என் பொழுதுகளை ஆக்கிரமித்திருந்த ஓர் போதில்
பயம் கொன்று திரும்பி
அதன் கண்களைச் சந்தித்தேன்.
பிரபஞ்சப் பேரொளி சுடர் விட்ட அதன் கண்களில்
கருணையின் தரிசனமும் தாண்டவமாட
சுருங்கிய கோடுகள் புள்ளிகளாயின.

உண்மையுரு எதுவென்று மயங்கி நின்ற
என்னிடம்,
‘உன் எண்ணங்கள் கொள்ளும் வடிவம்தானடி சகியே நான்,
திண்ணமாய் எதிர் கொள் மலைக்காமல்,
புலியோ,.. புள்ளிமானோ எதுவுமே நீ வளர்ப்பதுதான்’ என்றுரைத்து,
இளந்துளிர்க் கொம்புகளை
மெல்லக்குலுக்கியபடி
அசை போட ஆரம்பித்தது எண்ணப்புற்களை..


டிஸ்கி: கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.

9 comments:

ராமலக்ஷ்மி said...

/புலியோ,.. புள்ளிமானோ எதுவுமே நீ வளர்ப்பதுதான்’/

மிகச் சரி.

நல்ல கவிதை சாந்தி.

பால கணேஷ் said...

ஆஹா... அருமையான கருப்பொருளில் அழகான கவிதை. புலியாயினும் புள்ளி மானாயினும் நம் வளர்ப்பே அது. ஆமோதிக்கிறேன். கை தட்டுகிறேன்.

சசிகலா said...

‘உன் எண்ணங்கள் கொள்ளும் வடிவம்தானடி சகியே நான்,
திண்ணமாய் எதிர் கொள் மலைக்காமல்,// நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் எனும் விவேகானந்தர் வரிகள் நினைவுக்கு வருகிறது . வரிக்கு வரி ரசித்தேன் .

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலக்ஷ்மி,

வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கணேஷ்,

வாசித்தமைக்கு மிக்க நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சசிகலா,

வாசித்தமைக்கு மிக்க நன்றி.

Priyarajan said...

I am PriyaRajan doing M. Phil Communication in M.S University, Tirunelveli. As my part of study I am doing my research on blog and bloggers who use effectively blog for disseminate information. My Thesis titled as "Study on Blogging Pattern Of Selected Bloggers (Indians)".Thanks in Advance.

மாலதி said...

மிகசிறந்த கவிதை பாராட்டுகள் தொடர்க...

பாச மலர் / Paasa Malar said...

எண்ணங்களின் வார்ப்புதான் வாழ்க்கை என்னும் உங்கள் எண்ணங்களின் வார்ப்பு அருமை..