Pages

Thursday, November 18, 2010

இன்னுமொரு தினமல்ல..(கவிதைப்போட்டி)


அல்லன கண்டால் விலகிட வேண்டும்..
அன்னை பூமியை காத்திடல் வேண்டும்..
தேனீபோல் உழைத்திட வேண்டும்..
ஒற்றுமையும் இங்கு வளர்த்திட வேண்டும்..


மூடமை கண்டு எதிர்த்திட வேண்டும்..
முதுமையை என்றும் மதித்திட வேண்டும்..
இளமையில் கல்வி கற்றிட வேண்டும்..
எளியோருக்கு இரங்கிடல் வேண்டும்..


வேற்றுமையிங்கே களைந்திடல் வேண்டும்..
பிரிவினை செய்தால் பொங்குதல் வேண்டும்..
பெற்றவர்தன்னை பேணிடல் வேண்டும்..
சோதரமிங்கே வளர்ந்திடல் வேண்டும்..


மனிதத்தையும் கூட வளர்த்திட வேண்டும்..
பதர்களை வேருடன் ஒழித்திடல் வேண்டும்..
ஆணிவேராய் நாங்களிருக்க;
ஆலமரமாய் நீவிர் வளர்வீர்..


நாளைய உலகின் நாற்றங்கால்களே..
வாழ்த்துச்சொல்லி முடிப்பதல்ல..
வாழவைப்பதில் தொடங்கும் இத்தினம்..
பூத்துச்செழிப்பீர் அனுதினம்..

டிஸ்கி: இது பாரத்.. பாரதி நடத்திய கவிதைப்போட்டிக்காக எழுதினது :-))

4 comments:

ராமலக்ஷ்மி said...

//ஆணிவேராய் நாங்களிருக்க;
ஆலமரமாய் நீவிர் வளர்வீர்..


நாளைய உலகின் நாற்றங்கால்களே..
வாழ்த்துச்சொல்லி முடிப்பதல்ல..
வாழவைப்பதில் தொடங்கும் இத்தினம்..//

அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் அமைதிச்சாரல்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க :-))

பத்மா said...

all the best .
நல்லா இருக்குங்க

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பத்மா,

நன்றிங்க ..