Pages

Saturday, March 13, 2010

கான்க்ரீட் காடுகள்..



காடுகளை அழித்து
இன்னொரு காடு.
மனித நேயம்
பட்டுப்போனாலும்;
பணம் காய்ச்சி மரங்கள்
நிறைந்திருக்கும் இங்கே..

குயிலோசை ஓய்ந்தாலும்
தொலைக்காட்சி உண்டெங்களுக்கு
தாலாட்ட..
மார்கழிப்பனியாய்
தொழிற்சாலைப்புகை இருக்க
ஏலோரெம்பாவாய் பாட
எழுந்திருப்பதில்லை நாங்கள்.

விருட்சங்கள் கூட
எங்கள் வீடுகளில்,
இயல்பைத்தொலைத்து,
குறுகி நிற்கின்றன.

வாழ்விடம் போலவே
மனமும் குறுகிப்போய்,
கான் கிரீட் காடுகளில் வாழும்
நாங்களும் ஆதிவாசிகள்தாம்.


4 comments:

சந்தனமுல்லை said...

:-) அங்கே வாழ்வதைத்தானே முன்னேற்றம் என்கிறோம்?!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முல்லை,

புற முன்னேற்றம் மட்டும்தானே இருக்கிறது.

வந்ததுக்கு நன்றிப்பா.

கவிதன் said...

காடுகளை அழித்து
இன்னொரு காடு.....கான்க்ரீட் காடு...

உண்மைதான்.....! நேயமற்ற மனித மிருகங்கள் வாழும் காடு....~ நல்ல படைப்பு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கவிதன்,

நன்றி,..வருகைக்கும் கருத்துக்கும்.